Saturday, June 25, 2011

6. நட்பு


இவனும் அவளும்:


அவளை காதலிக்கிறனா? அல்லது வெறும் ஃபிரண்டுதானா..

எனக்கு பதில் தெரியவில்லை. இந்த கேள்வி எப்பொழுதும் கேட்டுக் கொள்வதால்தான், இதுவரை யாரையும் காதலித்ததில்லை. ஆனால் இப்ப நடக்கிறதே வேறு..

முதல் முறையாய் முத்தம்..
ஊரில் இல்லாதால், தினமும் நாலு முறை போன்.. நாப்பது தடவை 'மிஸ் யூ' ன்னு மெசெஜ்


அப்ப தான் எனக்கு ஒரு முட்டாள்தனமான யோசனை வந்துச்சு. ஒரு இங்கிலீஸ் (தமிழ் டப்பிங்) படத்துல பார்த்தது. கிளைமேக்ஸ்ல ஹீரோவும் ஹீரோயினும் 'இங்கிலீஸ்' கிஸ் கொடுப்பாங்க. ஆனால் உடனே விலகி, ஃபீலிங் வர்ல, அதனால ஃபிரண்ட்ஸ் னு முடிவு பண்ணிடுவாங்க!

அவளுக்கு உடனே போன் பண்ணினேன்.

"எனக்கு கிஸ் வேணும்"
"இந்தா.." ப்ச் சத்தம் கேட்டது.
"எனக்கு நிறைய வேணும்"
"காலேஜீக்கு வந்ததும், உம் மூஞ்சி பூரா எச்சி பன்றேன்.." சிரித்தாள்.
"உதட்டுல?"
கொஞ்ச நேரம் பேசவில்லை. பிறகு " எனக்கு பிடிக்காது" என்றாள்.
"இங்கிலீஸ் படம் பார்த்ததில்லையா"
"சினிமால கூட பிடிக்காது" என்றாள்.
"ஒகே..  மறுபடியும் பேசறேன்" போனை கட் பண்ணினேன்.

எந்த சந்தேகமும் இல்லை. அவள் என்னை ஃபிரண்டாகத்தான் பார்க்கிறாள்.
*****
ஆனாலும் என்னால ஒரு சாதரண நட்பா எடுத்துக்க முடியலை. அதுக்கப்புறம் லீவுல அதிகமா பேசலை.

எனக்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டுச்சு. அவகிட்ட பட்டும்-படாமலும் பேசினேன்.

என்னடா ஆச்சுன்னு அடிக்கடி கேட்டாள். நான் ஒன்னுமில்லை, எப்பவும் போலதான் இருக்கேன்னு சொன்னேன்.

ஆனாலும் சாய்ங்காலம் சந்திச்சு வழக்கம் போல பேசுவோம். அவகிட்ட இருந்து விலகவும் முடியலை. வழக்கம் போல சாதரணமாவும் பேச முடியலை. ரொம்ப குழப்பமா இருந்துச்சு.

*****

அவ ஃபிரண்டுதான் மனசுக்குள்ள முடிவெடுத்தேன். பின்னால மாறலாம். அதே சமயம் இது காதலாக மாறும்னு நினைக்க கூடாதுன்னு முடிவு பண்ணுனேன்.

அப்புறம் என்னால சகஜமா பழக முடிஞ்சுது.

நான் சகஜமாயிட்டேன்னு நினைக்கிறதுக்குள்ள, நான் வேறு ஒரு காரியம் பண்ணிட்டேன்.

சாய்ங்காலம் வழக்கம் போல பேசிட்டு, கிளாஸ்ல இருந்து வெளியே வந்தோம். அது ரெண்டாவது மாடியில இருந்தது. படிக்கட்டுல இறங்கும் போது தோனுச்சு.

"சனிக்கிழமை சினிமாவுக்கு போலாமா. வர்றீயா", வரமாட்டாள்னு தெரியும், இருந்தாலும் கேட்டேன்.

அவ மேலும் மூனு படிக்கட்டு கீழே இறங்கி, திரும்பி பார்த்து கேட்டாள்.
"எனக்கு சினிமா பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல"

அவள் முகத்தை நேர் கீழாக பார்க்க முடிந்தது. அவள் கண்களில் கோபமில்லை.
"ஆனால் எனக்கு பிடிக்கும்ல" என்றேன் சிரித்தபடி..
"வேணும்னா வர்றேன்", என்றாள்.

அந்த இரண்டு வார்த்தைகள் காதுக்குள்ள விழறதுக்குள்ள எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு. சட்டுனு நல்ல காத்து அடிச்சுதுல, அவ துப்பட்டா நல்லா விலகிடுச்சு. அந்த கணம் என் பார்வை, துப்பட்டா விலகிய இடத்தில போய் நிலைச்சிடுச்சு.

அவ துப்பட்டாவை சரி பண்ணினாள்.

"ஸாரி" அவள் முகத்தை பார்த்து சொன்னேன்

ஹாஸ்டல் வரைக்கும் நடந்து போனதே தெரியலை. எதுவும் பேசவில்லை. அடிக்கடி அவ முகத்தை பார்த்து தலை குனிஞ்சது மட்டும் ஞாபகமிருக்குது.

*****


குறுந்தொகை

மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை
பெருந் தோள் நுணுகிய நுசுப்பின்
கல் கெழு கானவர் நல்குறு மகளே.

- கருவூர் ஓதஞானியார்

0 comments: